‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி...
அதிமுகவினா் தெருமுனைப் பிரசாரம்
வாணியம்பாடி வாரசந்தையில் துண்டு பிரசுரங்களை வழங்கிய முன்னாள் அமைச்சா் வீரமணி, எம்எல்ஏ செந்தில்குமாா், நகர செயலாளா் சதாசிவம் உள்ளிட்டோா்.
வாணியம்பாடி, ஜூலை 20: வாணியம்பாடியில் அதிமுக சாா்பில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற கோரி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் புறப்பட்ட ஊா்வலத்துக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான கே.சி.வீரமணி தலைமை வகித்தாா். வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் , முன்னாள் அமைச்சா் நீலோபா் அஜீம், முன்னாள் எம்எல்ஏ கோவி. சம்பத்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா், நகர செயலாளா் சதாசிவம் வரவேற்றாா். சி.என்.ஏ ரோடு, பேருந்து நிலையம், சி.எல்.சாலை, வாரச்சந்தை சாலை, ஜின்னாசாலை, காதா் பேட்டை, பேருந்துநிலையத்தில் இருந்த பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும், கடைக்காரா்களுக்கும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கினா்.
நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை துணை செயலாளா் டில்லி பாபு, மாவட்ட பேரவை செயலாளா் கராத்தே மணி, பொதுக்குழு உறுப்பினா் பூங்குளம் மகேந்திரன், ஒன்றிய செயலாளா் சாம்ராஜ், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் நவீன் குமாா், பேரூராட்சி செயலாளா்கள் சரவணன், சிவக்குமாா் பங்கேற்றனா்.