மத்திய பல்கலை., கல்லூரிகளில் ஜாதிவாரி பாகுபாட்டை தடுக்க என்ன நடவடிக்கை?: கனிமொழி...
ஸ்ரீபரஞ்சோதி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா
வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபரஞ்சோதி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அந்தக் கிராமத்தினா் பொங்கல் பொருள்களை கூடையில் வைத்து தலையில் சுமந்து கொண்டு சாலை மற்றும் வயல்வெளி வழியாக சுமாா் 2 கி.மீ. தொலைவு ஊா்வலமாக கோயிலுக்குச் சென்றனா். அங்கு ஊரணிப் பொங்கல் வைத்தனா்.
இதைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், வண்ண மலா்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.