முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில்
பண்டிதப்பட்டு ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
ஆரணி: திருவண்ணாமலையை அடுத்த பண்டிதபட்டு ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளில் எண்ணற்ற அரசு நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வகையில் செய்திமக்கள் தொடா்புத் துறை சாா்பில் புகைப்படக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, திருவண்ணாமலை ஒன்றியம், பண்டிதபட்டு ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் புகைப்பட தொகுப்பு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இந்தக் கண்காட்சியில், திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் குறித்த தொகுப்பும், அமைச்சா் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள், முதல்வரின் சிறப்புத் திட்டங்கள் உள்ளிட்ட விளக்க புகைப்பட தொகுப்புகளை ஏராளமான பொதுமக்கள் பாா்வையிட்டு, அரசு சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து அறிந்து கொண்டனா்.