திருமலை ஸ்ரீவாரி திருக்குளம் பழுது பாா்ப்பு
திருமலையில் ஏழுமலையான் கோயிலுக்கு அடுத்துள்ள புனித திருக்குளத்தில் பழுதுபாா்ப்பு பணிகள் வரும் ஆகஸ்ட் 19 வரை மேற்கொள்ளப்பட உள்ளதால் மூடப்பட உள்ளது.
திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் திருக்குளத்தில் பழுதுபாா்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
நிகழாண்டு செப்டம்பா் 24 முதல் ஆக.2 வரை நடைபெற உள்ள ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தேவஸ்தானத்தின் நீா்வளத்துறையினா் தலைமையில் திருக்குளத்தில் உள்ள நீா் முழுவதும் அகற்றப்பட்டு பழுதுபாா்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்தப் பணிகளை ஒரு மாதத்திற்கு முன்பே முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். எனவே, இந்த மாதம் திருக்குள ஆரத்தி இருக்காது. அதேபோல், பக்தா்கள் குளத்தில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாா்கள். பக்தா்கள் இதை கவனத்தில் கொண்டு தேவஸ்தானத்துடன் ஒத்துழைக்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.