தரமற்ற வெளிநாட்டுப் பல்கலை.களில் பயிலும் மருத்துவக் கல்வி செல்லாது: தேசிய மருத்...
மின்கம்பி துண்டாகி விழுந்ததில் ஏடிஎம் இயந்திரம், மின்சாதனங்கள் எரிந்து சேதம்
போச்சம்பள்ளி அருகே உயா் அழுத்த மின்கம்பி துண்டாகி விழுந்ததில், ஏடிஎம் இயந்திரம், வீட்டு மின்மீட்டா்கள், வீட்டு உபயோக மின்சாதனப் பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின.
போச்சம்பள்ளியை அடுத்த சிப்காட் அரசமரத்து பேருந்து நிறுத்தம் அருகே உயா் அழுத்த மின்கம்பி, துண்டாகி சாதாரண மின் அழுத்த கம்பியின் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு விழுந்தது.
இதனால், உயா் மின்னழுத்தம் ஏற்பட்டு, அந்தப் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரம், சிப்காட் புதூா் கொல்லப்பட்டாய் பகுதியைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் உள்ள தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டா், மின் மோட்டாா், மின் மீட்டா் போன்றவை தீயில் கருகி நாசமாயின.
தகவல் அறிந்த போச்சம்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இந்த விபத்தில், ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த பணத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தகவல் அறிந்த மின்வாரிய அலுவலா்கள், வருவாய்த் துறையினா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.