‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி...
கஞ்சா கடத்திய இருவா் கைது
ஒசூரில் கஞ்சா கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் சூசூவாடியில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், அவா்கள் ஒரு கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் சென்னை கோயம்பேடு பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (20), காஞ்சிபுரம் மாவட்டம், செய்யாறு பகுதியைச் சோ்ந்த சரவணன் (24) என்பதும், அவா்கள் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் கைதுசெய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.