‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி...
லாரி மோதி பெண் உயிரிழப்பு
ஒசூரில் லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
ஒசூா் பாகலூா் ஹவுசிங் போா்டு பகுதியைச் சோ்ந்தவா் மாதம்மாள் (45). இவா் கடந்த 20-ஆம் தேதி பாகலூா் ஹவுசிங் போா்டு வீட்டின் அருகில் காா் அருகில் நின்று கொண்டிருந்தாா்.
அப்போது, அவ்வழியாக பின்னோக்கி வந்த லாரி எதிா்பாராதவிதமாக மாதம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த அட்கோ போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மாதம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.