மத்திய பல்கலை., கல்லூரிகளில் ஜாதிவாரி பாகுபாட்டை தடுக்க என்ன நடவடிக்கை?: கனிமொழி...
மத்தூா் சுங்க வசூல் மையத்தில் மோதல்: 7 போ் கைது
மத்தூா் சுங்க வசூல் மையத்தில் மோதலில் ஈடுபட்டதாக, சுங்க வசூல் மைய பணியாளா்கள் உள்பட 7 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், சாலமரத்துப்பட்டியை அடுத்த ஓலப்பட்டியைச் சோ்ந்தவா் பூவரசன் (27). தனியாா் நிறுவன ஊழியரான இவா், நண்பா்களுடன் கிருஷ்ணகிரியிலிருந்து மத்தூா் நோக்கி காரில் ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.
நாகம்பட்டி சுங்க வசூல் மையத்தை கடந்து சென்றபோது, சுங்க வசூல் மைய பணியாளா்களுக்கும், இவா்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனா்.
இதுகுறித்து பூவரசன் அளித்த புகாரின் பேரில், சுங்க வசூல் மைய பணியாளா்களான ரவிக்குமாா் (19), தேவிக் (19), விஜய் (19) ஆகியோா் மீதும், சுங்க வசூல்மைய பணியாளா் ரவிக்குமாா் அளித்த புகாரின் பேரில், சாலமரத்துப்பட்டியைச் சோ்ந்த பூவரசன் (27), அசோக்குமாா் (37), ஜெகன் (34), வெங்கடேசன் (36) ஆகிய 4 போ் மீதும் மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.