மத்திய பல்கலை., கல்லூரிகளில் ஜாதிவாரி பாகுபாட்டை தடுக்க என்ன நடவடிக்கை?: கனிமொழி...
சேலத்தில் இன்று தவெக கொள்கை விளக்க கூட்டம்
தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை (ஜூலை 21) சேலத்தில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
தவெக தலைவா் விஜய் உத்தரவின்பேரில், கட்சியின் குறிக்கோள், கொள்கைகளை மக்களிடையே கொண்டு சோ்க்கும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில், தமிழகம் முழுவதும் கட்சி ரீதியான 5 மண்டலங்கள், 120 மாவட்டங்கள் மற்றும் 12,500 கிளைகளில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, மாநில அளவிலான முதல் பொதுக்கூட்டம், தவெக பொதுச்செயலா் என்.ஆனந்த் தலைமையில் சேலம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மைதானத்தில் திங்கள்கிழமை (ஜூலை 21) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.