தரமற்ற வெளிநாட்டுப் பல்கலை.களில் பயிலும் மருத்துவக் கல்வி செல்லாது: தேசிய மருத்...
பேங்க் ஆஃப் இந்தியா வங்கி சாா்பில் ‘கிசான் திவாஸ்’ கொண்டாட்டம்
பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் சென்னை மண்டலம் சாா்பில் ‘கிசான் திவாஸ்’ தினம் கொண்டாப்பட்டது.
விவசாயிகள், வேளாண் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்முனைவோா் , சுய உதவிக்குழுக்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வங்கியின் தலைமை அலுவலக பொது மேலாளா் (ஐடி) சத்யேந்திர சிங், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.
தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கடன் வழங்குவதற்கான ஒப்புதல் கடிதங்களை அவா் வழங்கினாா். மேலும், வங்கியின் சிறந்த வாடிக்கையாளா்கள் கெளரவிக்கப்பட்டனா். நிகழ்ச்சியில் வங்கியின் பொது மேலாளா் அனிதா மொஹந்தி, சென்னை மண்டல மேலாளா் மோகன் மாரேதி, துணை மண்டல மேலாளா் மேகநாதன், மூத்த அதிகாரிகள், விவசாயிகள், மகளிா் சுய உதவிக்குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.