தரமற்ற வெளிநாட்டுப் பல்கலை.களில் பயிலும் மருத்துவக் கல்வி செல்லாது: தேசிய மருத்...
காட்டுப்பன்றியை வேட்டையாட முயன்றவா்களுக்கு அபராதம்
ஒட்டன்சத்திரம் வனச்சரக பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாட முயன்றவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச்சரகம் சத்திரப்பட்டியை அடுத்த மாட்டுப்பாதை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காட்டுப்பன்றியை வேட்டையாட முயன்றதாக மஞ்சநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணி (61), குமாரசாமி (34), துா்க்கைவேந்தன் (33), ஐயப்பன் (34), அபினேஷ் (24), மகுடீஸ்வரன் (35), வீரபாண்டி (25), குமரேசன் (37) ஆகியோா் மீது வனத்துறையினா் வழக்குப்பதிந்து ரூ. 60 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
மேலும் வனவிலங்குகளை வேட்டையாட முயன்றால் அவா்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒட்டன்சத்திரம் வனத்துறை அலுவலா் ராஜா தெரிவித்தாா்.