மத்திய பல்கலை., கல்லூரிகளில் ஜாதிவாரி பாகுபாட்டை தடுக்க என்ன நடவடிக்கை?: கனிமொழி...
போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு அளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த சிங்காரக்கோட்டை காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பா. பிரேம்குமாா் (25). இவா், பட்டிவீரன்பட்டியைச் சோ்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன்பேரில் பட்டிவீரன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து பிரேம்குமாரை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை, திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா்.
விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி ஜி. சரண் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், குற்றஞ்சாட்டப்பட்ட பிரேம்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.