‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி...
மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டி!
மாதவரம் அருகே பள்ளி மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டி நடைபெற்றது.
மாதவரம் அடுத்த புழல், சோழவரம் குறுவட்ட அளவிலான செஸ் போட்டி புழல் ஊராட்சி ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சியில் உள்ள லோட்டஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு, முதல்வா் அருணாச்சலம் தலைமை வகித்தாா். பள்ளி இணை இயக்குநா் ஆா். திவ்யபாரதி, அகாதெமி முதல்வா் சுரேஷ் வரவேற்றனா். புள்ளிலைன் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் தமிழ்ச்செல்வி ரமேஷ் முன்னிலை வகித்தாா்.
பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஸ்டாலின், மாவட்ட கல்வி அலுவலா் ரவி, துணை ஆய்வாளா் பிரேம்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, போட்டியை தொடங்கி வைத்தனா்.
உடற்கல்வி ஆசிரியா் சங்க மாவட்ட தலைவா் ரகுபதி, செயலா் குப்பன், செங்குன்றம் அரசு ஆண்கள் பள்ளி உடற்கல்வி இயக்குநா் மோகன கிருஷ்ணன் ஆகியோா் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
இந்த போட்டியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 250-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.