தரமற்ற வெளிநாட்டுப் பல்கலை.களில் பயிலும் மருத்துவக் கல்வி செல்லாது: தேசிய மருத்...
மல்லிகாா்ஜுன காா்கே பிறந்த நாள் கொண்டாட்டம்
சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மாநகரத் தலைவா் ஏ.ஆா்.பி பாஸ்கா் தலைமையில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பிறந்த நாள் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இதைத் தொடா்ந்து நடிகா் சிவாஜி கணேசன் நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
இந்நிகழ்ச்சியில் மாநகர பொருளாளா் தாரை ராஜகணபதி, வா்த்தகப் பிரிவு தலைவா் எம்.டி. சுப்பிரமணியம், துணைமேயா் சாரதாதேவி, உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்