செய்திகள் :

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்கக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ்!

post image

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளதாக அவையின் தலைவர் ஜகதீப் தன்கர் இன்று (ஜூலை 21) தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதாகவும் தன்கர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று முதல் ஆகஸ்ட் 21 வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. முதல் நாளான இன்று இரு அவைகளிலும் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், கீழடி அகழாய்வு முடிவுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அதோடு மட்டுமின்றி, அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கருத்துகள், அகமதாபாத் விமான விபத்து, பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி உள்ளிட்டவை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முடிவு செய்திருந்தனர்.

இதனிடையே, தில்லியில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மான நோட்டீஸை மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கரிடம் உறுப்பினர்கள் வழங்கினர்.

இது குறித்துப் பேசிய ஜகதீப் தன்கர்,

''நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968, 31 பி பிரிவின்படி நீதிபதி வர்மாவை பதவிநீக்கம் செய்வதற்கான குழுவை அமைக்கக் கோரி உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இந்த நோட்டீஸ் இன்று எனது பார்வைக்கு கொண்டுவரப்பட்டது. இதில், அவையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருந்தனர். உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான உறுப்பினர்களின் ஆதரவு போதிய எண்ணிக்கையில் உள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

இந்த நோட்டீஸ் மக்களவையிலும் வழங்கப்பட்டுள்ளதை சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க பொதுச் செயலாளருக்கு தன்கர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | மும்பை ரயில் குண்டுவெடிப்பு.. 19 ஆண்டுகளுக்குப் பின் 12 பேர் விடுதலை செய்யப்பட்டது ஏன்?

Rajya Sabha receives notice for removal of Justice Varma: Dhankhar

பதவிக்காலம் முடிவதற்குள் குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா: அடுத்து என்ன நடக்கும்?

குடியரசு துணைத் தலைவர் பதவி வகித்த ஜகதீப் தன்கர் பதவிக்காலம் முடிவதற்குள் ராஜிநாமா செய்துள்ளார்.‘குடியரசு துணைத் தலைவர்' என்னும் இந்திய அரசமைப்பின் இரண்டாவது பெரிய பதவியிலிருக்கும் ஒருவர் தமது பதவிக்க... மேலும் பார்க்க

‘ஏழைகளின் போராளி அச்சுதானந்தன்' - ராகுல் காந்தி இரங்கல்!

கேரள முன்னாள் முதல்வரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான வி. எஸ். அச்சுதானந்தன் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ... மேலும் பார்க்க

போர் விமான விபத்து: வங்கதேசத்துக்கு உதவத் தயார் - பிரதமர் மோடி

வங்க தேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் விபத்துக்குள்ளான விவகாரத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பயிற்சியில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ராஜிநாமா!

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். மருத்துவ காரணங்களுக்காக பதவியை ராஜிநாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பார்க்க

முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவு: கேரளத்தில் நாளை பொது விடுமுறை!

முன்னாள் முதல்வர் வி. எஸ். அச்சுதானந்தன் மறைவையொட்டி, கேரளத்தில் 3 நாள்களுக்கு அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. திருவனந்தபுரத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி. எஸ். அச்சுதானந்த... மேலும் பார்க்க

அச்சுதானந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்

கேரள முன்னாள் முதல்வரும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது, கேர... மேலும் பார்க்க