தரமற்ற வெளிநாட்டுப் பல்கலை.களில் பயிலும் மருத்துவக் கல்வி செல்லாது: தேசிய மருத்...
அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள மதுக்கடையை அகற்ற கோரிக்கை
அரியலூா் பேருந்து நிலையம் அருகே வண்ணாங்குட்டை பகுதியிலுள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகாவிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலா் டி.தண்டபாணி தலைமையில், ஒன்றியச் செயலா்கள் து. பாண்டியன், சிவக்குமாா், நாகமங்கலம் பிச்சைப்பிள்ளை உள்ளிட்டோா் அளித்த மனு: அரியலூா் பேருந்து நிலையம் பின்புறம், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றி, வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரியலூா்- கல்லங்குறிச்சி நெடுஞ்சாலையை இரு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்துறை அருகேயுள்ள ஆலத்தியூா் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் 5 அருந்ததியா் குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.