அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள மதுக்கடையை அகற்ற கோரிக்கை
அச்சுதானந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்
கேரள முன்னாள் முதல்வரும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது,
கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது. இவர், மக்கள் சேவைக்காகவும் கேரளத்தின் வளர்ச்சிக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். நாங்கள் இருவரும் மாநில முதல்வர்களாக இருந்தபோது எங்களுக்கிடையே நடந்த உரையாடலை நினைவுகூர்கிறேன். இந்த சோகமான நேரத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
கேரள முன்னாள் முதல்வரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தன் (வயது 101) வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை (ஜூலை 21) காலமானார்.
ஏற்கெனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கடந்த ஜூன் 23 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு மாதமாக வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்ததது.
இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி பிற்பகல் 3.20 மணிக்கு அச்சுதானந்தன் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்!
Achuthanandans passed away Prime Minister narendra modi condoles