செய்திகள் :

‘ஏழைகளின் போராளி அச்சுதானந்தன்' - ராகுல் காந்தி இரங்கல்!

post image

கேரள முன்னாள் முதல்வரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான வி. எஸ். அச்சுதானந்தன் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ‘தோழர் வி. எஸ். அச்சுதானந்தன் மறைவுச்செய்தி ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நீதிக்கும் ஜனநாயகத்துக்காகவும் ஓய்வின்றி குரல் கொடுத்தவர் கேரளத்தின் முன்னாள் முதல்வர்.

ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்களின் சாம்பியனாக(”ஏழைகளின் போராளி”) திகழ்ந்தவர். கொள்கை பிணைப்புடனான அரசியலை தன் வாழ்நாளில் உயர்த்திப்பிடித்தவர். அதிலும் குறிப்பாக, பொது நலன், சுற்றுச்சூழல் சார் பிரச்சினைகளில் துணிச்சலான முடிவுகளை எடுத்தவர்.

அன்னாரது குடும்பத்துக்கும், தோழமைகளுக்கும், அவரை பின்தொடர்பவர்களுக்கும் இரங்கலைத் தெரிவிக்கிறேன்’ என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

Rahul Gandhi pays tributes to Achuthanandan

உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக 1.73 லட்சம் ஹெக்டோ் வனப் பகுதி பயன்பாடு

புது தில்லி: கடந்த 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக 1.73 லட்சம் ஹெக்டோ் பரப்பளவிலான வனப் பகுதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மக்களவையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. வளா்ச்சித் திட்டங்... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தன்கா் ராஜிநாமா

புது தில்லி: இந்தியாவின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் (74) தனது பதவியை திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்தாா். அவருக்கு இன்னும் சுமாா் இரண்டு ஆண்டுகள் பதவிக் காலம் மீதமுள்ள நிலையில், உ... மேலும் பார்க்க

பதவிக்காலம் முடிவதற்குள் குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா: அடுத்து என்ன நடக்கும்?

குடியரசு துணைத் தலைவர் பதவி வகித்த ஜகதீப் தன்கர் பதவிக்காலம் முடிவதற்குள் ராஜிநாமா செய்துள்ளார்.‘குடியரசு துணைத் தலைவர்' என்னும் இந்திய அரசமைப்பின் இரண்டாவது பெரிய பதவியிலிருக்கும் ஒருவர் தமது பதவிக்க... மேலும் பார்க்க

போர் விமான விபத்து: வங்கதேசத்துக்கு உதவத் தயார் - பிரதமர் மோடி

வங்க தேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் விபத்துக்குள்ளான விவகாரத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பயிற்சியில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ராஜிநாமா!

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். மருத்துவ காரணங்களுக்காக பதவியை ராஜிநாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பார்க்க

முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவு: கேரளத்தில் நாளை பொது விடுமுறை!

முன்னாள் முதல்வர் வி. எஸ். அச்சுதானந்தன் மறைவையொட்டி, கேரளத்தில் 3 நாள்களுக்கு அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. திருவனந்தபுரத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி. எஸ். அச்சுதானந்த... மேலும் பார்க்க