செய்திகள் :

பதவிக்காலம் முடிவதற்குள் குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா: அடுத்து என்ன நடக்கும்?

post image

குடியரசு துணைத் தலைவர் பதவி வகித்த ஜகதீப் தன்கர் பதவிக்காலம் முடிவதற்குள் ராஜிநாமா செய்துள்ளார்.

‘குடியரசு துணைத் தலைவர்' என்னும் இந்திய அரசமைப்பின் இரண்டாவது பெரிய பதவியிலிருக்கும் ஒருவர் தமது பதவிக்காலம், அதாவது ஐந்தாண்டுகள் முடிவதற்குள் ராஜிநாமா செய்தால் அதன்பின் என்ன நடக்கும் தெரியுமா..?

இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவி வகித்த ஜகதீப் தன்கர்(74) வயது மூப்பின் காரணமாக உடல்நிலையைக் காரணம் காட்டி தமது பதவியை ராஜிநாமா செய்வதாக திங்கள்கிழமை(ஜூலை 21) அறிவித்துள்ளார். இதையடுத்து, குடியரசு துணைத் தலைவர் பதவி குறித்து சில சுவாரசிய விவரங்களை தெரிந்து கொள்வது இத்தருணத்தில் கவனம் பெறுகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 67-இன்கீழ், குடியரசுத் தலைவருக்கு ராஜிநாமா கடிதம் சமர்ப்பித்துவிட்டு, குடியரசுத் துணைத் தலைவர் பதவியைவிட்டு ஒருவர் விலகலாம். இதுவே நடைமுறை.

குடியரசுத் தலைவரால் ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன், குடியரசுத் துணைத் தலைவர் பதவி காலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

அதன்பின், அந்த பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு புதிதாகவொருவர் குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அதுவும், பதவி காலியானதாக அறிவிக்கப்பட்ட அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இந்திய அரசமைப்பில் குடியரசு துணைத்தலைவரே மாநிலங்களவைத் தலைவராகவும் பொறுப்பு வகிப்பவர் என்பதால், அவர் ராஜிநாமா செய்வதால் மாநிலங்களவைத் தலைவர் பதவியும் காலியாகிவிடும். அதுவரை(அதிகபட்சம் 6 மாதங்கள்), அப்பொறுப்பில் மாநிலங்களவை துணைத் தலைவர் இருப்பார்.

இந்திய தேர்தல் ஆணையமே குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலையும் நடத்தும். அதில், வாக்குரிமை பெற்ற உறுப்பினர்களாக மாநிலங்களவை, மக்களவை ஆகிய இரு அவைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.

தேர்தல் முடிந்து, குடியரசு துணைத் தலைவராக தேர்வாகும் வேட்பாளர், பதவியேற்ற நாளிலிருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு முழுமையாக இப்பதவியில் நீடிப்பார்.

இந்திய அரசின் பல முக்கிய பதவிகளில், குறிப்பிட்ட வயது அல்லது ஏற்கெனவே தேர்வான நபர் பாதியில் பதவி விலகினால் அவருக்கு இன்னும் எத்தனை காலம் பதவி வழங்கப்பட்டதோ அதுவரையில், அப்பதவிக்கு புதிதாக தேர்வாகும் நபர் பொறுப்பு வகிப்பார்.

ஆனால், குடியரசு துணைத் தலைவர் பதவியின் கண்ணியம் மரியாதை கருதி, அப்பதவிலிருப்பவர் என்ன காரணங்களுக்காக அப்பதவியைவிட்டு விலகினாலும் அல்லது பதவியில் இருக்கும்போதே மறைந்தாலும், அவருக்கடுத்து குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேர்வாகும் நபர் முழுமையாக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அப்பதவியில் நீடிக்க முடியும்!

அரசியல் ரீதியாக அமலாக்கத் துறை செயல்பாடு: சித்தராமையா மனைவிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டனம்

புது தில்லி: மத்திய அரசின் விசாரணை அமைப்பான அமலாக்கத் துறை அரசியல் ரீதியாக பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. கா்நாடக முதல்வா் சித்தராமையாவின் மனைவிக்கு எதிராக அமலாக்கத் துறை அனுப... மேலும் பார்க்க

மும்பையில் வழித்தடத்தைவிட்டு விலகிச்சென்று விபத்துக்குள்ளான விமானம்: பயணிகள் தப்பினா்

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பெய்து வரும் பலத்த மழையால் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏா் இந்தியா விமானம் வழித்தடத்தைவிட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. இதில் அதன் 3 சக்கரங்கள் வ... மேலும் பார்க்க

சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் கூறுவது நாட்டுக்கு அவமானம்: காா்கே குற்றச்சாட்டு

புது தில்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டையில் தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து கூறிவருவது நாட்டுக்கு அவமானம் என்று மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன ... மேலும் பார்க்க

சூதாட்ட செயலி விவகாரம்: நடிகா் பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டாவுக்கு அமலாக்கத் துறை சம்மன்

இணையவழி சூதாட்ட செயலிகள் தொடா்பான பண முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராக நடிகா்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, நடிகை லக்ஷ்மி மஞ்சு ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. ‘ஜ... மேலும் பார்க்க

கேரள முன்னாள் முதல்வா் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவு

திருவனந்தபுரம்: கேரள அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக நிறைந்திருந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் திங்கள்கிழமை காலமானாா். அவருக்கு வயது 10... மேலும் பார்க்க

உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக 1.73 லட்சம் ஹெக்டோ் வனப் பகுதி பயன்பாடு

புது தில்லி: கடந்த 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக 1.73 லட்சம் ஹெக்டோ் பரப்பளவிலான வனப் பகுதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மக்களவையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. வளா்ச்சித் திட்டங்... மேலும் பார்க்க