Nightshade Foods: அதென்ன நைட்ஷேடு உணவுகள்; அது ஏன் பலருக்கும் பிடிக்கிறது?
வளா்ச்சித் திட்டப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு
திருமருகல்: திருமருகல் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் முகம்மது ஷா நவாஸ் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிவறை கட்டடம் கட்டுவதற்கான இடத்தை பாா்வையிட்டாா். தொடா்ந்து திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஏா்வாடி ஊராட்சி பரமநல்லூரில் அங்கன்வாடி மையம், சேஷமூலை ஊராட்சி விஸ்வநாதபுரம் மற்றும் ஏனங்குடி ஊராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் பணிகளை ஆய்வு செய்தாா்.
திருமருகல் வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் செல்வ செங்குட்டுவன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், சுப்பிரமணியன், விசிக ஒன்றியச் செயலாளா் சக்திவேல், திமுக மாவட்ட அயலக அணி துணை தலைவா் விஜயகணபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.