Nightshade Foods: அதென்ன நைட்ஷேடு உணவுகள்; அது ஏன் பலருக்கும் பிடிக்கிறது?
ஆடி அமாவாசை: ராமேசுவரத்துக்கு நாளை சிறப்பு பேருந்துகள்
சென்னை1: ஆடி அமாவாசையை முன்னிட்டு சென்னை மற்றும் பிற நகரங்களிலிருந்து ராமேசுவரத்துக்கு புதன்கிழமை (ஜூலை 23) சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
வியாழக்கிழமை (ஜூலை 24) ஆடி அமாவாசை தினம் என்பதால், தமிழகம் மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களிலிருந்தும் ராமேசுவரத்துக்கு அதிக அளவில் பொதுமக்கள் சென்று முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
இதையொட்டி, புதன்கிழமை (ஜூலை 23) சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து ராமேசுவரத்துக்கும் மற்றும் வியாழக்கிழமை (ஜூலை 24) ராமேசுவரத்திலிருந்து சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. www.tnstc.in இணையதளம் மற்றும் tnstc செயலி மூலம் முன்பதிவு செய்து பொதுமக்கள் பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.