செய்திகள் :

Parthiban: "தளபதி விஜய், என் தலைமையில் 16 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார்!" - பார்த்திபன் பதிவு

post image

நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் எப்போதும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி வருவார்.

அவ்வப்போது தன் வாழ்வில் நிகழ்ந்த தருணங்களையெல்லாம் சமூக வலைதளப் பதிவுகள் மூலம் நமக்குச் சொல்வார்.

Parthiban Teenz Issue

அப்படி நேற்றைய தினம், ஒரு திரைப்படப் பூஜையன்று 10 ஜோடிகளுக்கு தன்னுடைய சொந்தச் செலவில் திருமணம் செய்து வைத்தது தொடர்பாக அவர் போட்ட பதிவு இப்போது சமூக வலைதளப் பக்கங்களில் பரவி வருகிறது.

அந்தப் பதிவில் அவர், "‘கல்யாணசுந்தரம்’ போட்டோ செஷனோடு முடிந்து (கை)விட்ட படம்.

ஆனால் பூஜையன்று 10 ஜோடிகளுக்கு என் சொந்தச் செலவில் தாலி முதல் மெட்டி வரை, தட்டுமுட்டு சாமான், பெட்டி, படுக்கை எனச் சீர் செய்து, சினிமாப் பூஜைகளைப் பயனுள்ளதாகவும் செய்யலாம் எனத் தொடங்கி வைத்தேன். அதுவே பின்னர் பலரால் தொடரப்பட்டது.

Parthiban's Kalyana Sundaram Movie Photoshoot
Parthiban's Kalyana Sundaram Movie Photoshoot

பின்னொரு காலத்தில் தளபதி விஜய், என் தலைமையில் 16 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். ‘இதன் மூலம் புண்ணியம் சேர்த்துக் கொள்ளும் விஜய் தான் மணமக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்’ என அப்போது புரட்டிப் பேசினேன்.

அப்படிப்பட்ட நல்ல காரியங்கள் எல்லாம் சேர்ந்துதான் அவருக்கு கட்சித் தொடங்கும் தைரியம் வந்தது. யாரோ ஒருவர் இந்தப் போட்டோவை அனுப்பியதால், பழைய நினைவை கிளறியதால்…" எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

Vijayakanth: "என் நண்பன் விஜயகாந்த் போனதுல இருந்து என் உடம்பும் போய்டுச்சு" - கலங்கும் நடிகர் தியாகு

தமிழ் சினிமாவின் பொக்கிஷ கலைஞரான நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் 24-வது நினைவு தினம் இன்று (ஜூலை 21).இதனை முன்னிட்டு காலை முதலே திரைபிரபலங்கள் பலரும் சென்னையில் அவரது சிலைக்கு நேரில் வந்து மாலை... மேலும் பார்க்க

'சிவாஜி சாருக்கு அன்னிக்கு 103 டிகிரி காய்ச்சல்' - 'என் ஆச ராசாவே' அனுபவம் சொல்லும் கஸ்தூரி ராஜா

சினிமா உலகின் சிகரம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவரது 24வது நினைவு தினம் இன்று. கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் 'என் ஆச ராசாவே' என்ற படத்தில் அவர் நடித்திருந்ததால், நடிகர் திலகத்தின் நினைவலைகள் குறித்த... மேலும் பார்க்க

கோலிவுட் ஸ்பைடர்: ரஜினி படம்... அழைப்புக்காகக் காத்திருக்கும் தமன்னா!

சென்னைக்கு வரும்போதெல்லாம் பாடகி சின்மயி வீட்டுக்கு விசிட் அடித்து, அவருடைய ட்வின்ஸ் குழந்தைகளுடன் விளையாடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார் சமந்தா. அதேபோல, ஒவ்வோர் ஆண்டும் சின்மயி வீட்டில் நடக்கும்... மேலும் பார்க்க

Retro நாயகிகள் 12: ''அம்மாவின் மரணம், கைகூடாத காதல்; ரீ-என்ட்ரி'' - நடிகை ஸ்ரீதேவி பர்சனல்ஸ்

இத்தனை வாரங்களா, ’70-கள்ல தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு’ன்னுதான் இந்தத் தொடரை ஆரம்பிப்போம். ஆனா, இந்த வாரம் நாம எழுதப்போற நடிகை ஓர் அழகான வி... மேலும் பார்க்க

GV Prakash: "படத்தின் ரிலீஸுக்கு உதவி, ஜி.வி பாதி சம்பளம்தான் வாங்கினார்" - தயாரிப்பாளர் சொல்வதென்ன?

'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'கண்ணை நம்பாதே' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்திருக்கும் 'ப்ளாக்மெயில்' திரைப்படம் ஆகஸ்ட் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவி... மேலும் பார்க்க