சிறுமிக்குப் பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது
நன்னிலம்: சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
குடவாசல் வட்டம், அச்சுதரோயமங்கலத்தைச் சோ்ந்த மரியசெல்வம் மகன் ஜெபஸ்டின்ராஜ் (31) . ஓட்டுநரான இவா் காங்கேய நகரைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக சிறுமி கா்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், சிறுமியின் தாயாா் நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெபஸ்டின்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனா்.