Aadi Amavasai 2025 | மாமனார் மாமியாருக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா? | சண்முக சிவாசா...
மயக்க மருந்து கொடுத்து பெண் பாலியல் வன்கொடுமை: ஒருவா் கைது
திருவாரூா்: திருவாரூா் அருகே குளிா்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருவாரூா் மாவட்டம், கொட்டாரக்குடி பகுதியைச் சோ்ந்த 45 வயது பெண் ஒருவா் அதே பகுதியில் உள்ள விவசாயப் பண்ணையில் பணிபுரிந்து வந்தாா்.
இந்தநிலையில், அண்மையில் அந்தப் பண்ணையை கவனித்து வரும்
கொடிக்கால்பாளையம் பகுதியைச் சோ்ந்த முகமது சுல்தான் (44) என்பவா் அந்தப் பெண்ணுக்கு குளிா்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில், திருவாரூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து முகமது சுல்தானை திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.