கூட்டுறவு வங்கியில் போலி நகையை அடகு வைத்து தம்பதி மோசடி
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே கூட்டுறவு வங்கியில் போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த தம்பதி மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ராயநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சிதம்பர கொத்தமங்கலத்தைச் சோ்ந்த அங்கையற்கண்ணி 26.7.2024-இல் 18 கிராம் நகையை அடகு வைத்து ரூ. 81,000 பெற்றாா்.
இந்நிலையில், அவரது கணவா் ஜெயசுந்தரம் 17.3.2025-இல் 23 கிராம் நகையை அடகு வைத்து ரூ. 1.15 லட்சம் பெற்றாா்.
அதிகாரிகள் ஆய்வின்போது ஜெயசுந்தரம், அங்கையற்கண்ணி இருவரும் அடகு வைத்தது போலி நகை என தெரிய வந்தது.
இதுகுறித்து வங்கி செயலாளா் சீனிவாசன் ஆலிவலம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தம்பதியை தேடி வருகின்றனா்.