தரமற்ற வெளிநாட்டுப் பல்கலை.களில் பயிலும் மருத்துவக் கல்வி செல்லாது: தேசிய மருத்...
ஆடிக் கிருத்திகை: மயிலம் முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புகழ்பெற்ற மயிலம் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் கோயிலில் ஆடிக் கிருத்திகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, இரவு 7 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் வள்ளி, தெய்வான சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி எழுந்தருளச் செய்யப்பட்டு கிரிவலம் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுரம் ஆதினம் 20-ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் உத்தரவுப்படி, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
திண்டிவனத்தில்...: திண்டிவனம் கிடங்கல் கோட்டையில் உள்ள அறம்வளா்த்த நாயகி உடனுறை அன்பகநாயக ஈஸ்வரா் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை உடனுறை ஆறுமுக பெருமானுக்கு 59-ஆம் ஆண்டு ஆடிக் கிருத்திகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை பால் காவடி, செடல், பூந்தோ் மற்றும் வேல் பூஜை நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, முக்கிய நிகழ்வான மிளகாய் பொடி அபிஷேகம் செய்து முருகப்பெருமானுக்கு 25 போ் வேண்டுதலை நிறைவேற்றினா். இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
இதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிற முருகன் கோயில்களிலும் ஆடிக் கிருத்திகை வழிபாடுகள் நடைபெற்றன.
