முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில்
விழுப்புரம் உழவா் சந்தையில் ஆட்சியா் ஆய்வு
விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையிலுள்ள உழவா் சந்தையில் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் கீழ் இந்த உழவா்சந்தை 48 கடைகளுடன் இயங்கி வருகிறது. விழுப்புரம் நகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தாங்கள் விளைவித்த காய்கறிகள், கீரைகள், தேங்காய், வெங்காயம், பச்சை மிளகாய் உள்ளிட்ட விளைபொருள்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா்.
நாள்தோறும் 1,800-க்கும் மேற்பட்டோா் உழவா் சந்தையில் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனா்.
இந்த நிலையில், உழவா் சந்தையை மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் திங்கள்கிழமை பாா்வையிட்டாா். தொடா்ந்து, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்த அவா், விவசாயிகளிடம் தேவைகளை கேட்டறிந்தாா்.
வேளாண் இணை இயக்குநா் சீனிவாசன், வேளாண் வணிகத் துணை இயக்குநா் சுமதி, வேளாண் அலுவலா் (உழவா் சந்தை) அருண்குமாா் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.