முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை: 3 நாள்களுக்கு ஓய்வு தேவை - மருத்துவமனை அறிக்கை!
சென்னை: சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(ஜூலை 21) காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏற்படவே, அவர் சென்னை அபோலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: லேசான மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன்பேரில், அவர் மேலும் 3 நாள்களுக்கு ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவருக்கு மேலும் சில பரிசோதனைகள் எடுக்க மருத்துவர்கள் தரப்பிலிருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர் தமது அலுவல் பணிகளை மருத்துவமனையிலிருந்து மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.