செய்திகள் :

அச்சுதானந்தன் மறைவு: முதல்வர் இரங்கல்

post image

கேரள முன்னாள் முதல்வரும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில்,

கேரள அரசியலில் புரட்சிகர மரபை ஆழமாக விட்டுச்சென்றுள்ளார் தோழர் வி.எஸ். அச்சுதானந்தன்.

இவர், கொள்கை அரசியலையும், பொதுச்சேவை உணவர்வையும் ஒருங்கே கொண்ட வெகுஜன தலைவர், வாழ்நாள் கம்யூனிஸ்ட் மற்றும் முன்னாள் முதல்வராவார்.

உண்மையானவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கும், மார்சிய கம்யூனிஸ்ட் தோழர்களுக்கும் கேரள மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது சார்பாகவும் தமிழக மக்கள் சார்பாகவும் அமைச்சர் எஸ். ரகுபதி, அச்சுதானந்தனின் இறுதிச்சடங்கில் பங்கேற்று மரியாதை செலுத்துவார். செவ்வணக்கம் எனக் குறிப்பிட்டு மு.கருணாநிதியுடன் அவர் இருக்கும் படத்தையும் பகிர்ந்துள்ளார்.

கேரள முன்னாள் முதல்வரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தன் (வயது 101) வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை (ஜூலை 21) காலமானார்.

ஏற்கெனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கடந்த ஜூன் 23 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு மாதமாக வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்ததது.

இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி பிற்பகல் 3.20 மணிக்கு அச்சுதானந்தன் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்!

VS Achuthanandan has passed away mkstalin condoles

முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை: 3 நாள்களுக்கு ஓய்வு தேவை - மருத்துவமனை அறிக்கை!

சென்னை: சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(ஜூலை 21) கால... மேலும் பார்க்க

முதல்வரிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி!

முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல் நிலை குறித்து தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். மேலும் பார்க்க

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து: 3 பேர் பலி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகேவுள்ள நாரணாபுரம் - அனுப்பங்குளம் சாலையில் அமைந்துள்ள பட்டா... மேலும் பார்க்க

சீமானுடன் பேச்சுக்கு தயாராக இல்லை! -உச்ச நீதிமன்றத்தில் விஜயலக்‌ஷ்மி திட்டவட்டம்

புது தில்லி: சீமான் மீது விஜயலக்‌ஷ்மி அளித்த பாலியல் புகாரை ரத்து செய்யக்கோரி, சீமான் தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று(ஜூலை 21) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போ... மேலும் பார்க்க

முதல்வர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற வேண்டும்! -எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பூரண நலம் பெற விழைகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏ... மேலும் பார்க்க

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதவியேற்பு!

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் 54-ஆவது தலைமை நீதிபதியாக மநிந்திரா மோகன் ஸ்ரீவாஸ்தவா பதவியேற்றார். அவருக்கு தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர். என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.ஆளுநர் மாளிகையில் இன்று... மேலும் பார்க்க