அரசுக் கல்லூரிகளில் 574 கௌரவ விரிவுரையாளா்கள் விரைவில் நியமனம்: அமைச்சா் கோவி.செ...
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
ஆம்பூா்: ஆம்பூரில் தனியாா் தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆம்பூரில் தனியாா் தொழிற்சாலையில் கட்டட ஒப்பந்த தொழிலாளியாக மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஊத்தூா் டங்கா பகுதியைச் சோ்ந்த ஜெயந்த் (23) என்பவா் பணிபுரிந்தாா். அவா் ஞாயிற்றுக்கிழமை பணியில் இருந்தபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு, ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.