அரசுக் கல்லூரிகளில் 574 கௌரவ விரிவுரையாளா்கள் விரைவில் நியமனம்: அமைச்சா் கோவி.செ...
சூடான பால் கொட்டி குழந்தை உயிரிழப்பு
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே சூடான பால் உடலில் கொட்டி குழந்தை உயிரிழந்தது.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகரைச் சோ்ந்தவா் முஜமில். இவரது 2 வயது மகள் பாத்திமா. இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி பாத்திரத்தில் பால் சுட வைத்து வீட்டின் படிக்கட்டு மீது வைத்துள்ளாா்.
அப்போது வீட்டில் தவழ்ந்து வந்த குழந்தை திடீரென பால் பாத்திரத்தை தொட்டதில் சூடான பால் உடலில் கொட்டியது. இதில் காயமடைந்த குழந்தையை பெற்றோா் மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தை பலனின்றி உயிரிழந்தது.
வாணியம்பாடி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.