சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து: 3 பேர் பலி
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகேவுள்ள நாரணாபுரம் - அனுப்பங்குளம் சாலையில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பட்டாசுக்கு தேவையான மருந்து கொண்டு செல்லும்போது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.
உடனடியாக தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ மளமளவென பரவியதால் அருகில் இருந்த அறைகளுக்கும் தீ பரவியது. இந்த விபத்தில் லட்சுமி, சங்கீதா ஆகிய இரு பெண்கள் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
பட்டாசு ஆலையில் நேரிடும் விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், ஆலைகளை ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்பாயம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
இனி ஒரு பட்டாசு ஆலை விபத்து கூட நடக்கக் கூடாது என, விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலைகள் அனைத்தையும் 10 நாள்களுக்கு ஆய்வுசெய்ய வேண்டும் என உத்தரவிட்ட தேசிய பசுமை தீர்பாயம், ஆலைகளில் விதிமீறல்கள் நடந்திருப்பது உறுதியானால், ஆலைகளை மூடுவது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க |சீமானுடன் பேச்சுக்கு தயாராக இல்லை! -உச்ச நீதிமன்றத்தில் விஜயலட்சுமி திட்டவட்டம்
The tragic incident in which three workers, including two women, died in an explosion at a cracker factory near Sivakasi