எழுதும் நிலா- மார்கரெட் அட்வுட்; கடல் தாண்டிய சொற்கள் - பகுதி 23
முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இத்தொலைக்காட்சியில் சின்னஞ்சிறு கிளியே என்ற புதிய தொடர் ஒளிபரப்பாவதால், இன்று முதல் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் இல்லத்தரசிகளை மட்டுமின்றி, இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் எடுக்கப்பட்டு வருகின்றன.
மற்ற தொலைக்காட்சித் தொடர்களுக்குப் போட்டியாக பல முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து தொடர்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஜீ தமிழில் சாயா சிங், செளந்தர்யா ரெட்டி நடிப்பில் கெட்டி மேளம் தொடரும், வைஷ்ணவி, அருண் நடிப்பில் வீரா தொடரும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த இரு தொடர்களின் ஒளிபரப்பு நேரமும் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதாவது, கெட்டி மேளம் தொடர் இரவு 6.30 மணிக்கும், வீரா தொடர் இரவு 7.30 மணிக்கும் ஒளிபரப்பாகவுள்ளது. சின்னஞ்சிறு கிளியே என்ற புதிய தொடர் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதால், மற்ற இரு தொடர்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடர், ஆணாதிக்கம் நிறைந்த குடும்பத்தில் திருமணமாகி வாழச் செல்லும் நாயகியை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. இதனால்,
ஸ்வாதிகா நாயகியாகவும், ரெளத்திரம் சையத் நாயகனாகவும் இத்தொடரில் நடிக்கின்றனர். இவர்களுடன், மதுமிதா, அபிதா, ஆறுமுக வேலு, காயத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க | காதலியை அறிமுகப்படுத்திய சீரியல் நடிகர்!