முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை: 3 நாள்களுக்கு ஓய்வு தேவை - மருத்துவமனை அறிக்கை!
முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியின்போது லேசாக தலைசுற்றல் ஏற்படவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் 2 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் முதல்வர் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் அடுத்த 2 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் உடல்நலம் பெற வேண்டும் என்று பலரும் கூறி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த், முதல்வர் மு.க. ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
அதேபோல முதல்வர் ஸ்டாலின் விரைந்து நலம் பெற வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.