எழுதும் நிலா- மார்கரெட் அட்வுட்; கடல் தாண்டிய சொற்கள் - பகுதி 23
முதல்வரின் திருப்பூர் பயணம் ஒத்திவைப்பு! - அமைச்சர் தகவல்
முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ளவிருந்த திருப்பூர் மாவட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. முதல்வர் 2 நாள்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் அடுத்த 2 நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினின் திருப்பூர் மாவட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ஜூலை 22, 23 தேதிகளில் முதல்வர் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்குச் செல்லவிருந்ததது குறிப்பிடத்தக்கது.