இந்தியாவில் செஸ் உலகக் கோப்பை - 2025!
செஸ் உலகக் கோப்பை - 2025 இந்தியாவில் நடைபெறும் என்று சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஜார்ஜியாவில் மகளிர் செஸ் உலகக் கோப்பை போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் வைஷாலி, திவ்யா, ஹரிகா, ஹம்பி உள்பட 46 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை நடைபெறவுள்ள ஆடவர் செஸ் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போட்டி நடைபெறும் நகரம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 150 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.