நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்கக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ்!
ஏகே - 64: ரிஸ்க் எடுக்கும் தயாரிப்பு நிறுவனம்?
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவுள்ள படத்தின் பட்ஜெட் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுடன் வணிக ரீதியாகவும் ரூ. 250 கோடி வரை வசூலித்தது.
இதனைத் தொடர்ந்து, அஜித்தின் அடுத்தபடமான ஏகே - 64 படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்க உள்ள நிலையில், படத்தை ரூ. 250 கோடி செலவில் எடுக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். காரணம், குட் பேட் அக்லி வெற்றிக்குப் பின் அஜித் குமார் தன் சம்பளத்தை ரூ. 150 கோடி வரை உயர்த்தியதாகத் தெரிகிறது.
இதனால், படத்தின் பட்ஜெட் ரூ. 250 கோடியைத் தாண்டலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், வணிக ரீதியாக நடிகர் அஜித்துக்கு ரூ. 200 கோடிக்கும் மேல் மார்க்கெட் இல்லை. குட் பேட் அக்லி போல் படம் நன்றாக இருந்தால் மட்டுமே வணிக வெற்றியை நோக்கி நகர முடியும் என்பதால் ஏகே - 64 தயாரிப்பு நிறுவனம் ரிஸ்க் எடுக்கக் காத்திருகிறது.
இதையும் படிக்க: விவாகரத்து முடிவில் ஹன்சிகா?