வரதட்சணை கொடுமை - இடுப்பு, கால்கள் முறிந்த நிலையில் ஆட்சியரிடம் பெண் புகாா்
ஜீ தமிழ் நிகழ்ச்சியில் கடைசி நாள்! நடிகை மணிமேகலை உருக்கம்
சின்ன திரை நடிகை மணிமேகலை ஜீ தமிழில் தனது கடைசி நாள் குறித்து உருக்கமாக விடியோ பதிவிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறிய பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார்.
தற்போது அந்த நிகழ்ச்சியின் இறுதிநாள் படப்பிடிப்பு என்பதால், மணிமேகலை தனது உருக்கமான எண்ணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணிமேகலை பதிவிட்டுள்ளதாவது,
''டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் இறுதி நாள். ஒரு தொகுப்பாளராக எனக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சி. இந்தப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றி. நான் என்ன செய்தாலும், என் பக்கம் இருந்து எனக்குத் தேவையான அனைத்து ஊக்கத்தையும் அளித்தீர்கள். அதற்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஒவ்வொரு எபிஸோடிலும் உங்களின் அன்பைக் கொடுத்தீர்கள். அது மிகப்பெரிய விஷயம். இந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசனை மிகவும் வெற்றிகரமானதாக மாற்றியுள்ளீர்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.

அதோடு மட்டுமின்றி உடன் பணியாற்றிய சக தொகுப்பாளர், நடுவர்கள், இயக்குநர் குழு, கலைத் துறை, நடன இயக்குநர்கள் மற்றும் போட்டியாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
அவரின் இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் பலர் பாராட்டுகளையும் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
மணிமேகலையின் ஆரம்ப வாழ்க்கை
தொலைக்காட்சிகளில் அரைமணி நேர நேரலை நிகழ்ச்சித் தொகுப்பாளராக சின்ன திரையில் அறிமுகமானவர் நடிகை மணிமேகலை. இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
நகைச்சுவைக் கலந்த சுவாரசியத்துடன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதால் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
15 ஆண்டுகளாகத் தொகுப்பாளராக உள்ள மணிமேகலை, தன் கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார்.
மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கடந்த 4 சீசன்களிலும் பங்கெடுத்து வந்த மணிமேகலை, முன்னதாக நிறைவு பெற்ற 5-வது சீசன் நிகழ்ச்சியை ரக்ஷனுடன் தொகுத்து வழங்கினார்.
அந்த நிகழ்ச்சியில், போட்டியாளராகப் பங்கேற்ற தொகுப்பாளருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அதிலிருந்து விலகினார். சில நாள்களுக்கு எந்தவொரு நிகழ்ச்சிகளும் இல்லாமல் இருந்தால்,
அதன் பின்னரே, அவருக்கு ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட மணிமேகலை, ஜீ தமிழில் மக்கள் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக மாறியுள்ளார்.
இதையும் படிக்க | எதிர்நீச்சலுக்கு போட்டியாக ஜீ தமிழில் சின்னஞ்சிறு கிளியே! ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு!