நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்கக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ்!
விவாகரத்து முடிவில் ஹன்சிகா?
நடிகை ஹன்சிகா மோத்வானி கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழில், ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஹன்சிகா, அதன்பின் ‘பிரியாணி’, ’சிங்கம் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சமீபத்தில், மை 3 வெப் என்ற வெப் தொடரிலும் நடித்து இருந்தார். கார்டியன் படத்திலும் பேயாக நடித்திருந்தார். இது கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
கடந்த 2022 டிசம்பரில் தொழிலதிபர் சோஹல் கதூரியா என்பவரை ஹன்சிகா மணம் முடித்தார். தொடர்ந்து, மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கி இருவரும் குடியேறினர். இதற்கிடையே, ஹன்சிகாவும் அவரது அம்மாவும் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக ஹன்சிகாவின் நாத்தனார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த நிலையில், ஹன்சிகா கடந்த சில மாதங்களாகத் தன் கணவரைப் பிரிந்து அம்மா வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ஹன்சிகா விவாகரத்து முடிவில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: காந்தாரா சேப்டர் - 1 படப்பிடிப்பு நிறைவு... ஆச்சரியப்படுத்தும் மேக்கிங் விடியோ!
Reports suggest that actress Hansika Motwani is living separately from her husband.