"உங்களைப் பார்த்து பொறாமைப்பட்டேன் என நினைக்கிறீர்களா?"- அஷ்வினிடம் ஹர்பஜன் சிங் கேள்வி
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் அஷ்வினின் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.
அதில் ஹர்பஜன் சிங் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.
அந்த நேர்காணலில் ஹர்பஜன் சிங்கிடம் கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார். அதாவது, “ கிரிக்கெட் அணியில் பொறாமை எந்த அளவுக்கு இருக்கின்றது.

ஏனென்றால் மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை வேறு மாதிரி பார்ப்பார்கள், அணுகுவார்கள்.
நாம் உலகத்தை எப்படி அணுகுகிறோமோ அதுபோல்தான் மற்றவர்களும் இருப்பார்கள் என அவர்கள் நினைப்பார்கள்.
இதில் சிலர் உங்களுக்கு என்னை பார்த்து பொறாமை இருக்கிறது என்று கூறுகிறார்களே, அதைப் பற்றி உங்களுக்கு பதில் சொல்ல முடியுமா என்று அஸ்வின் கேட்டிருக்கிறார்.
அதற்கு பதில் அளித்த ஹர்பஜன் சிங், “ நான் உங்களைப் பார்த்து பொறாமைப்பட்டேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நான் உன்னுடன் அமர்ந்து இவ்வளவு நேரம் பல விஷயங்கள் குறித்துப் பேசினேன்.
அப்படி இருக்கும்போது நான் பொறாமைப்படும் நபர் என்று நீங்கள் எப்படி நினைத்தீர்கள்? என கேட்டிருக்கிறார்.
அதற்கு பதில் அளித்த அஷ்வின், அப்படி பொறாமை படுவது தவறு ஒன்றும் இல்லை.

அது மனிதனின் இயல்புதான். அப்படி நீங்கள் என் மீது பொறாமை பட்டாலும் அது நியாயம் தான் என்று நான் சொல்கின்றேன்.
நான் எதையும் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டேன். நாம் எல்லாம் மனிதர்கள் தான்” என்று அஷ்வின் கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...