நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்கக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ்!
பாம்பை வெறும் கைகளால் பிடித்த பாலிவுட் நடிகர் சோனு சூட் !
பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த பாம்பை வெறும் கைகளால் பிடித்தார்.
பாலிவுட் நடிகர் சோனு சூட் சனிக்கிழமை தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில் அவர் தனது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த பாம்பை வெறும் கைகளால் எந்தவித பயமின்றியும் பிடிக்கிறார்.
தொடர்ந்து அந்த பாம்பை பை ஒன்றில் போடுகிறார். பின்னர் குழுவிடம் ஒப்படைத்து, பாம்பை பாதுகாப்பாக காட்டில் விடுமாறு கேட்டுக்கொள்கிறார். தற்போது இந்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: துரைமுருகன்
இதுகுறித்து அவர் கூறுகையில், பாம்பு சங்க வளாகத்திற்குள் வந்ததாகவும், அது ஒரு விஷத்தன்மையற்ற பாம்பு. பாம்புகளை பிடிக்க நிபுணர்களை மட்டுமே அழைக்க வேண்டும். மக்கள் அவற்றைத் தாங்களாகவே பிடிக்க முயற்சிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.