கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்!
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் (வயது 101) வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை காலமானார்.
மாரடைப்பு மற்றும் வயது தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக அச்சுதானந்தன் கடந்த ஜூன் 23 ஆம் தேதி திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, தீவிர சிகிசைப் பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.