செய்திகள் :

`லாக்கப் டெத், கீழடி அறிக்கை, மகளிர் இடஒதுக்கீடு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எழுப்பும் விவகாரங்கள்

post image

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) முதல் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 21 வரை ஒரு மாத காலம் நடைபெறவிருக்கிறது.

இதனை முன்னிட்டு, நேற்று நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை இக்கூட்டத்தொடரில் தங்கள் தரப்பிலிருந்து எந்தெந்த பிரச்னைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படும் என்பது குறித்து பேசியிருக்கிறார்.

தனியார் ஊடகத்திடம் இது குறித்து பேசிய தம்பிதுரை, "தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கொல்கிறது.

இலங்கை அரசு அளித்த வாக்குறுதிகள் எதுவாக இருந்தாலும், அவை சரியான நேரத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். எனவே இதில் கவனம் செலுத்துவது முக்கியம்.

தம்பிதுரை

நாடு முழுவதும், குறிப்பாக தமிழ்நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தல் மிக அதிகமாக உள்ளது. மாநில அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறிவிட்டது.

தமிழகத்தில் காவல்துறை லாக்கப் மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சிகளை நடத்திய தொல்பொருள் துறையின் அறிக்கையை மத்திய அரசு வெளியிடக் கோரியிருக்கிறோம்.

அரசாங்கம் அதை வெளியிட வேண்டும். மேலும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்த வேண்டும்." என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

கீழடி குறித்த கேள்விக்கு மக்களவையில் பதிலளித்த மத்திய அமைச்சர்- என்ன கூறினார்?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கியது. இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க எம்.பி டி.ஆர். பாலு, கீழடி அகழாய்வு ஆய்வற... மேலும் பார்க்க

சி.பி.எம் ஸ்தாபகர்; தொழிலாளர்களின் தோழன்... கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார்!

கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும் சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் இன்று காலமானார். அவருக்கு வயது 101. உடல்நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்ச... மேலும் பார்க்க

`ஆட்சி நம்மிடம் இருந்தாலும் அதிகாரம் ஆளுநரிடம் இருக்கிறது!’ - வெடித்த முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி கலந்து கொண்டு பேசுகையில், ``தேசிய ஜனநாய... மேலும் பார்க்க

லேசான மயக்கம்; நிகழ்ச்சிகள் ரத்து; மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் - என்ன நடந்தது?

நடைப்பயிற்சியின் போது...தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல்நல குறைபாடு காரணமாகச் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். முதல்வருக்கு என்ன ஆனது என்பது குறித்து அறிவாலய மற்றும் மருத்துவமனை ... மேலும் பார்க்க

Achuthanandan: கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்

கேரளா மாநில முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினருமான அச்சுதானந்தன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.இந்தியாவின் மூத்த இடதுசாரித் தலைவர் அச்சுதானந்தன். வயது... மேலும் பார்க்க