செய்திகள் :

முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: துரைமுருகன்

post image

முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை வழக்கமான நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உலா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவமனையில் உள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மகள் செந்தாமரை உள்ளனர். அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் மருத்துவமனை சென்று முதல்வரைச் சந்தித்து நலம் விசாரித்தனர்.

முதல்வரைச் சந்தித்த பின்னர் மருத்துவமனைக்கு வெளியே வந்த அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

"முதல்வருக்கு ஒன்றும் ஆகவில்லை. அவர் நலமாக இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார். இன்று மாலைகூட அவர் வீடு திரும்பலாம்" என்று கூறினார்.

முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் அடுத்த 2 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Minister Duraimurugan has said that Chief Minister M.K. Stalin is well and will return home soon.

இதையும் படிக்க | மருத்துவமனையில் முதல்வர் அனுமதி: குடும்பத்தினர், அமைச்சர்கள் வருகை!

சீமானுடன் பேச்சுக்கு தயாராக இல்லை! -உச்ச நீதிமன்றத்தில் விஜயலக்‌ஷ்மி திட்டவட்டம்

புது தில்லி: சீமான் மீது விஜயலக்‌ஷ்மி அளித்த பாலியல் புகாரை ரத்து செய்யக்கோரி, சீமான் தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று(ஜூலை 21) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போ... மேலும் பார்க்க

அச்சுதானந்தன் மறைவு: முதல்வர் இரங்கல்

கேரள முன்னாள் முதல்வரும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில்,கே... மேலும் பார்க்க

முதல்வர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற வேண்டும்! -எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பூரண நலம் பெற விழைகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏ... மேலும் பார்க்க

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதவியேற்பு!

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் 54-ஆவது தலைமை நீதிபதியாக மநிந்திரா மோகன் ஸ்ரீவாஸ்தவா பதவியேற்றார். அவருக்கு தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர். என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.ஆளுநர் மாளிகையில் இன்று... மேலும் பார்க்க

முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனைய... மேலும் பார்க்க

முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இத்தொலைக்காட்சியில் சின்னஞ்சிறு கிளியே என்ற புதிய தொடர் ஒளிபரப்பாவதால், இன்று முதல் ஒளிபரப்பு நே... மேலும் பார்க்க