அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா நீக்கம்
சென்னை: திமுகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவை நீக்கி, எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதிமுக அமைப்புச் செயலராக இருந்த அன்வர் ராஜா, இன்று திமுகவில் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்த நிலையில், அன்வர் ராஜா அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
திமுகவில் இணைவதற்காக, அன்வர் ராஜா, இன்று காலை அண்ணா அறிவாலயம் சென்றிருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.