'முதலமைச்சர் ஸ்டாலின் பூரண உடல்நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்' - தமிழிசை சௌந...
Shashi Tharoor: `அவர் கங்கிரஸாரில் ஒருவரா?’ - சசி தரூர் விசுவாசத்தை கேள்வி கேட்ட மூத்த தலைவர்
கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் கே. முரளிதரன், காங்கிரஸ் எம்.பி சசி தரூரை மீண்டும் தாக்கி பேசியிருக்கிறார். தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் சசி தரூர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் வரை அவர் காங்கிரஸில் ஒருவராக கருதப்பட மாட்டார் என்றும், மாநில தலைநகரில் நடக்கும் எந்த காங்கிரஸ் நிகழ்ச்சிக்கும் அழைக்கப்பட மாட்டார் என்றும் கூறியுள்ளார்.
Shashi Tharoor என்ன சொல்கிறார்?
சசிதரூர் தேசத்தின் எல்லை விவகாரங்களில் ராணுவம் மற்றும் மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.

கட்சிகாக தனது நிலைப்பாட்டைக் கட்சிக்காக மாற்றிக்கொள்ள முடியாது என்றும், கட்சியை விட தேசத்தின் நலனே முக்கியம் என்றும் பேசியுள்ளார். இதனால் அவர்மீது பலதரப்பிலிருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது கே முரளிதரன், "அவரது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாதவரை திருவனந்தபுரத்தில் நடக்கும் எந்தவொரு கட்சி நிகழ்ச்சிக்கும் அவரை அழைக்கப்போவதில்லை. அவர் எங்களுடன் இல்லை..." எனக் கூறியுள்ளார்.
சசி தரூர் தான் தேசிய பாதுகாப்புக்காக மற்ற கட்சியுடன் ஒத்துழைப்பது, சொந்த கட்சிக்கு எதிராக செயல்படுவதாகப் பார்க்கப்படுகிறது எனக் கூறியுள்ளார்.
எந்தப்பக்கம் தான் நிற்கிறீர்கள்... குழப்பும் Shashi Tharoor!
முன்னதாக யு.டி.எஃப் கூட்டணியின் சிறந்த முதலமைச்சர் வேட்பாளர் தேர்வாக சசி தரூர் இருப்பார் என்ற கணிப்பை சசி தரூர் பகிர்ந்தபோது, "அவர் முதலில் எந்த கட்சியில் இருக்கிறார் என்பதை முடிவு செய்ய வேண்டும்" என விமர்சித்திருந்தார் கே முரளிதரன்.
பஹல்காம் தாக்குதலில் சசி தரூர் பாஜகவின் கூற்றுகளை ஆதரிப்பது கட்சிக்கும் அவருக்குமான விசரிசல்களைத் தொடங்கி வைத்தது. இந்தியன் எக்ஸ்பிரஸில் கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் பொருளாதார வழிநடத்துதலை பாராட்டி எழுதிய கட்டுரையும் மாநில காங்கிரஸினர் மத்திதில் சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து எமர்ஜென்சி குறித்து இந்திராகாந்தியை விமர்சித்து சசி தரூர் மலையாள தினசரியில் எழுதிய பத்தியும் விமர்சனத்துள்ளாக்கியது.
இதனால் சசி தரூர் எந்த பக்கம்தான் நிற்கிறார் என்பதை முதலில் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என கேரள காங்கிரஸார் கொந்தளித்துள்ளனர்.
இதற்கிடையில் இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதனால் சசி தரூர் மீது காங்கிரஸினர் கவனம் குவிந்துள்ளது.