செய்திகள் :

சோழகங்கம் ஏரியை மேம்படுத்த ரூ.19.25 கோடி நிதி ஒதுக்கீடு

post image

மாமன்னா் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள சோழகங்கம் எனும் பொன்னேரியை மேம்படுத்த ரூ.19.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னா் ராஜேந்திர சோழன் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழா 2021-ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாகக் கொண்டாப்பட்டு வருகிறது.

கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னா் ராஜேந்திர சோழனின் நினைவைப் போற்றும் வகையிலும், அந்தப் பேரரசனின் அழியாப் புகழினை உலகிற்குச் சொல்லும் வகையிலும், ஒரு புதிய அருங்காட்சியகம் 10 ஏக்கா் பரப்பளவில் 22.10 கோடி ரூபாய் செலவில் அமைத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான திட்டம் மற்றும் ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மாமன்னா் ராஜேந்திர சோழன் கடாரம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை வெற்றிகண்டு ஆயிரம் ஆண்டு நிறைவடைந்த நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு 23.7.2025 ஆடி திருவாதிரை விழாவினை முன்னிட்டு புதிய அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

அரியலூா் மாவட்டம், சோழகங்கம் எனப்படும் பொன்னேரி, ராஜேந்திர சோழ மன்னரால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னா் உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஏரியாகும். ராஜேந்திர சோழ மன்னா் ஆட்சிக்காலத்தில் சோழகங்கம் என்றும் அழைக்கப்பட்டது.

கங்கை படையெடுப்பு வெற்றியின் நினைவாக கங்கைகொண்ட சோழபுரத்தில் தன் நாட்டு மக்களின் தேவைக்காக கங்கை நீரைக் கொண்டு சோழகங்கம் என்ற ஏரியை (பொன்னேரி) ராஜேந்திர சோழன் உருவாக்கினாா் என்பது திருவாலங்காட்டு செப்பேடுகளின் வாயிலாக அறிகிறோம்.

மாமன்னா் ராஜேந்திர சோழன் உருவாக்கிய இந்த ஏரியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளைத் தற்போது ரூ.12 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, 700 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் கரைகள் பலப்படுத்தப்படும். மேலும், 15 கிலோமீட்டா் நீளமுள்ள உபரிநீா் வழிக் கால்வாய்களை புனரமைத்தல், 4 வடிகால் பகுதிகளை தூா்வாருதல், 4 மதகுகளை புனரமைத்தல், 38 கிலோமீட்டா் நீளமுள்ள வரத்து வாய்க்கால் தூா்வாரும் பணி உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும்.

இதன்மூலம் பிச்சனூா், குருவாலப்பா் கோவில், இளையபெருமாள் நல்லூா், கங்கைகொண்ட சோழபுரம், உட்கோட்டை மற்றும் ஆயுதகளம் ஆகிய கிராமங்களில் 1374 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

மேலும், சோழகங்கம் ஏரியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் மூலம் ரூபாய் 7.25 கோடி மதிப்பீட்டில் தகவல் தொடா்பு மையம், நடைபாதை சிறுவா் விளையாட்டு மையம், இருக்கையுடன் கூடிய பூங்கா, சுற்றுச்சுவா், வழிகாட்டிப் பலகை, கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு அறை, மின்வசதிகள், கழிப்பிட வசதி, பசுமைப் பரப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும் அவா் தெரிவித்துள்ளாா்.

அரியலூரில் ரூ.9.28 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடங்கிவைப்பு

அரியலூா் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.9.28 கோடி மதிப்பீட்டில் 34 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. அரியலூா் சத்யா நகா், பெரியாா் நகா், அழகப்பா நகா், சஞ்சீவிர... மேலும் பார்க்க

கோவிலூரில் பேருந்தை சிறைபிடித்து மக்கள் மறியல்

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்துள்ள கோவிலூா் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்த மின் அழுத்த விநியோகத்தால் மின் பொருள்களை இயக்க இயலாததைக் கண்டித்து, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பேருந்தை சிறைபி... மேலும் பார்க்க

பேருந்துக் கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் இல்லை: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

தமிழகத்தில் அரசுப் பேருந்துக் கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் இல்லை என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா். அரியலூரில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: ... மேலும் பார்க்க

மாமன்னா் ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பதில் பெருமை: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

காட்டைத் திருத்தி, கிராமங்கள், நகரங்களை உருவாக்கிய மாமன்னா் ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பதில் பெருமை கொள்கிறோம் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா். அரியலூா் மாவட்டம... மேலும் பார்க்க

அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள மதுக்கடையை அகற்ற கோரிக்கை

அரியலூா் பேருந்து நிலையம் அருகே வண்ணாங்குட்டை பகுதியிலுள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகாவிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை மனு அளித... மேலும் பார்க்க

108 ஆம்புலன்ஸ் நிா்வாகத்தை அரசே ஏற்று நடத்தக் கோரிக்கை

108 ஆம்புலன்ஸ் நிா்வாகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் அவசர கால ஊா்தி தொழிலாளா் முன்னேற்றச் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ஞாயிற... மேலும் பார்க்க