அரசமைப்பில் மதச்சார்பின்மை நீக்கப்படாது... ஆனால்! - மத்திய அரசு பதில்
புது தில்லி: அரசமைப்புச் சட்டத்தில் சமதா்மம், மதச்சாா்பின்மை ஆகிய சொற்களை நீக்குவதற்கான நடவடிக்கை எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இன்று(ஜூலை 24) மாநிலங்களவை கூட்டத்தொடர் கேள்வி நேரத்தின்போது சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், “அரசமைப்புச் சட்டத்தில் சமதா்மம், மதச்சாா்பின்மை ஆகிய சொற்களை நீக்குவது தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்னவெனில், அச்சொற்களை நீக்குவதற்கான எந்தவொரு திட்டமும் உள்நோக்கமும் இப்போதைக்கு இல்லை. அத்தகைய சட்ட திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகள் ஏதேனும் நடத்தப்படுவதாயின், ஒருமித்த கருத்துடன் பொதுவெளியில் மேற்கொள்ளப்படும். இப்போதைக்கு அரசு இது தொடர்பான எந்தவித நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.