செய்திகள் :

`ஆடி முடிந்து ஆவணி பிறந்தால் அதிமுகவிற்கு நல்லதே நடக்கும்' - சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்

post image

"எடப்பாடி பழனிசாமி வைத்த குறி தப்பாது, வேட்டையன் குறி வைத்தால் வெல்வார் என்பதைப்போல எடப்பாடி பழனிசாமி குறி வைத்தால் வெல்வார்" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மதுரை தெப்பகுளம் முக்தீஸ்வரர் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "அதிமுக பிரதான கட்சியான திமுக-வை எதிர்க்கிறது. தவெக, நாதக, அன்புமணி ராமதாஸ் பாமக திமுக-வை எதிர்க்கிறது. எதிர்க்கும் எல்லோரும் ஒன்று சேர்ந்தால்தான் நோக்கம் நிறைவேறும். திமுக-வில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர், திருமாவளவன் ஆகியோரும் ஆட்சிக்கு எதிரான கருத்துக்களை சொல்கின்றனர். 20 சதவிகிதம் ஆதரவு, 80 சதவிகிதம் எதிர்ப்பு என்ற நிலையில் உள்ளனர்.

திமுக-வை எதிர்க்கும் கட்சிகளில், 50 ஆண்டுக்கால வரலாற்றுடன் மக்கள் நம்பிக்கை கொண்ட தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். 80 சதவிகித திமுக எதிர்ப்பு பிரிந்து நிற்பதால், சிதைந்து விடக்கூடாது மக்களுக்கு விடியல் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் எடப்பாடி பழனிசாமி பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறார். எதிர்ப்பவர்கள் ஒன்று சேர்ந்தால்தான் நோக்கம் நிறைவேறும்" என்றவரிடம்,

அன்வர்ராஜா விலகல் குறித்து கேட்டதற்கு, "தனிப்பட்ட ஒருவர் எடுக்கும் முடிவு கட்சியை பாதிக்காது. அதை பொது விவாதத்திற்கு கொண்டு வர வேண்டிய தேவை இல்லை. நாங்கள் புலி வேட்டைக்கு செல்கிறோம், இடையில் எலி, அணில் ஓடும், அதையெல்லாம் பார்க்க முடியாது, ஓ.பி.எஸ் இணைப்புக்கு காலம் கடந்துவிட்டது" என்றவரிடம்

ஆர்.பி.உதயகுமார்

'மற்ற கட்சிகள் அதிமுக-வுடன் இணைய பாஜக-வுடனான கூட்டணி தடையாக உள்ளதா?' என்ற கேள்விக்கு, "நல்ல நோக்கத்திற்காக எந்த தியாகத்தையும் செய்யலாம்" என்றவர்,

"மதுரை மாநகராட்சி ஊழல் குறித்து விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருப்பதால் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுக ஆட்சியில் அரசு கஜானாவில் மக்களுடைய பணம் பாதுகாப்பாக இருந்தது. ஆனால் திமுக-வின் ஆட்சியில் அரசு கஜானாவில் உள்ள பணம் தங்களின் பணம் என நினைக்கிறார்கள்" என்றார்.

"எடப்பாடி பழனிசாமி வைத்த குறி தப்பாது, வேட்டையன் குறி வைத்தால் வெல்வார் என்பதைப்போல எடப்பாடி பழனிசாமி குறி வைத்தால் வெல்வார்" என்றவரிடம்,

'நீதிமன்ற வழக்குகள், தேர்தல் ஆணைய விசாரணை அதிமுகவுக்கு தடையாக இருக்குமா? என்ற கேள்விக்கு,

"ஆடி முடிந்து ஆவணி பிறந்தால் எல்லாம் சரியாகும், அதிமுகவிற்கு நல்லதே நடக்கும்" என்றார்.

'ராமதாஸ் கொடுத்த புகார்; அன்புமணியின் நடைபயணத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு!' - முழு விவரம்!

'அன்புமணி நடைபயணம்..'பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸின் 'உரிமை மீட்க தலைமுறை காக்க...' என்கிற 100 நாள் நடைபயண பிரசாரத்துக்கு தமிழக டிஜிபி அனுமதி வழங்க மறுத்திருக்கிறார். அன்புமணிபாமக நிறுவனர் ராமதாஸ... மேலும் பார்க்க

ஜூலை 26, 27-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடி; நிகழ்ச்சி நிரல் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள்கள் சுற்றுப்பயணமாக தற்போது இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்.பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம்நேற்று இங்கிலாந்தில் அந்நாட்டு பிரதமருடனான சந்திப்ப... மேலும் பார்க்க

`முதல்வரை ஏமாற்றுகிறார்கள்; உயரதிகாரிகள் லாபி செய்து..!’ - கொந்தளிக்கும் ஹென்றி திபேன் | Interview

சிவகங்கை அஜித் குமார் சித்ரவதை கொலை வழக்கு, டி.எஸ்.பி சுந்தரேசன் வெளிப்படையாக உயர் அதிகாரிகளுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகள் என நாளுக்கு நாள் காவல்துறை மீதான விமர்சனங்கள் அதிகரித்துக் கொண்டே வர... மேலும் பார்க்க

``நேர்மையான காவல்துறை அதிகாரிக்கு இந்த நிலைமை என்றால், மக்களை யார் பாதுகாப்பது? - எடப்பாடி கேள்வி

திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பரத் ஸ்ரீனிவாஸ். இவர், கடந்த 1997 - ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து தற்பொழுது துணை கண்காணிப்பாளராக ... மேலும் பார்க்க

``ISI முத்திரை மாதிரி மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள கட்சி அதிமுக'' - எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை காந்தி சிலை அருகே அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி `மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற அடிப்படையில் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். கந்தர்வக... மேலும் பார்க்க