செய்திகள் :

'ராமதாஸ் கொடுத்த புகார்; அன்புமணியின் நடைபயணத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு!' - முழு விவரம்!

post image

'அன்புமணி நடைபயணம்..'

பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸின் 'உரிமை மீட்க தலைமுறை காக்க...' என்கிற 100 நாள் நடைபயண பிரசாரத்துக்கு தமிழக டிஜிபி அனுமதி வழங்க மறுத்திருக்கிறார்.

அன்புமணி
அன்புமணி

பாமக நிறுவனர் ராமதாஸூக்கும் அவரின் மகனான அன்புமணி ராமதாஸூக்கும் இடையேயான மோதல் இன்னும் ஓயவில்லை. அன்புமணி மீது ராமதாஸ் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். தன்னுடைய பெயரையே அன்புமணி பயன்படுத்தக் கூடாது என கடுமையாகவும் பேசியிருந்தார்.

'ராமதாஸ் புகார்...'

இந்நிலையில்தான் 'உரிமை மீட்க...தலைமுறை காக்க...' என்ற கோஷத்தோடு அன்புமணி நடத்தவிருந்த 100 நாள் நடைபயண பிரசாரத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என ராமதாஸ் தமிழக டிஜிபியிடம் மனு கொடுத்திருந்தார். இந்த நடைபயணத்தால் வட மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அன்புமணி
அன்புமணி

ராமதாஸ் அளித்த மனுவை தொடர்ந்து இப்போது அன்புமணியின் நடைபயணத்துக்கு தமிழக டிஜிபி அனுமதி வழங்க மறுத்திருக்கிறார். திருப்போரூர் கந்தசாமி கோவிலில் வழிபட்டுவிட்டு இன்றுதான் அன்புமணி தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடங்கியிருந்தார்.

'அனுமதி மறுப்பு...'

டிஜிபியின் கடிதம்
டிஜிபியின் கடிதம்

100 வது நாளில் தர்மபுரியில் நடைபயணத்தை முடிப்பதுதான் திட்டம். இந்நிலையில்தான் இப்போது அன்புமணியின் இந்த நடைபயணத்துக்கு எந்த மாவட்ட எஸ்.பியும் அனுமதி வழங்கக்கூடாதென தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருக்கிறார்.

ECI முறைகேடு: `எங்களிடம் ஆதாரமிருக்கிறது' - Rahul Gandhi | Kamal DMK BJP | Imperfect Show 25.7.2025

* இந்திராவை முந்திய மோடி? * பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு எவ்வளவு செலவானது? - வெளியுறவு அமைச்சகம் பதில்! * இந்தியா - பிரிட்டன் ஒப்பந்தம் கையெழுத்து?* “இந்தியர்களை பணியமர்த்துவதை நிறுத்த வ... மேலும் பார்க்க

ஜூலை 26, 27-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடி; நிகழ்ச்சி நிரல் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள்கள் சுற்றுப்பயணமாக தற்போது இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்.பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம்நேற்று இங்கிலாந்தில் அந்நாட்டு பிரதமருடனான சந்திப்ப... மேலும் பார்க்க

`முதல்வரை ஏமாற்றுகிறார்கள்; உயரதிகாரிகள் லாபி செய்து..!’ - கொந்தளிக்கும் ஹென்றி திபேன் | Interview

சிவகங்கை அஜித் குமார் சித்ரவதை கொலை வழக்கு, டி.எஸ்.பி சுந்தரேசன் வெளிப்படையாக உயர் அதிகாரிகளுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகள் என நாளுக்கு நாள் காவல்துறை மீதான விமர்சனங்கள் அதிகரித்துக் கொண்டே வர... மேலும் பார்க்க

``நேர்மையான காவல்துறை அதிகாரிக்கு இந்த நிலைமை என்றால், மக்களை யார் பாதுகாப்பது? - எடப்பாடி கேள்வி

திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பரத் ஸ்ரீனிவாஸ். இவர், கடந்த 1997 - ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து தற்பொழுது துணை கண்காணிப்பாளராக ... மேலும் பார்க்க

``ISI முத்திரை மாதிரி மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள கட்சி அதிமுக'' - எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை காந்தி சிலை அருகே அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி `மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற அடிப்படையில் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். கந்தர்வக... மேலும் பார்க்க